சென்னை:  தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள சொத்துக்கள் எங்களுக்கு சொந்தம் என இஸ்லாமிய சொத்து பாதுகாப்பு அமைப்பான வக்பு வாரியம் கூறி வருகிறது. அதன்படி, விருத்தாசலத்திலும் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தமானது என அறிவித்தது. இதற்கு தமிழகஅரசின் பதிவுத்துறையும் துணை போனது. இது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விஷயத்தில் பழைய நிலையே தொடரும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் என்பது இஸ்லாமியர்களுக்கான வக்ஃப் சட்டம் 1954 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது வக்ஃப் நிறுவனங்களை மேற் பார்வை யிடுகிறது மற்றும் நிர்வகிக்கிறது மற்றும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கிறது. இது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த ஆண்டு, பல பகுதிகளில் உள்ள சொத்துக்கள் எங்களுக்கு என சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த சொத்துக்களை யாரும் வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவித்துள்ளது. இதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு, பதிவுத்துறை மூலம் அறிவிப்பு வெளியிட்டது. இது பொதுமக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகாலம் வசித்து வந்த தங்களது இடம், வக்பு வாரியத்துக்கு சொந்தம் என திடீரென அறிவிப்பதாக என போராட்டத்தில் குதித்தனர். மேலும் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.

வக்புவாரியத்தின் இந்த மக்கள் விரோத போக்கு விருத்தாலம் மாவட்டத்திலும் தொடர்ந்தது. விருத்தாச்சலம் நகராட்சி இந்திரா நகர், சிந்தாமணி நகர், முல்லை நகர், நபிகள் நாயகம் ரோடு, வயலூர், பூந்தோட்டம், கார்குடல் என பல்வேறு பகுதியில் உள்ள குறிப்பிட்ட நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகஅரசும் காவடி தூக்கியது.  இதன் காரணமாக அந்த நிலம் அனைத்தும் பூஜ்ய மதிப்பு என விருத்தாச்சலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது என அறிவிக்கப்பட்டது.

இதனால், அந்த பகுதிகளில் காலங்காலமாக, வம்சாவழியாக பட்டா, சிட்டா, ஆவணங்களுன் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வக்பு வாரியம் மற்றும் தமிழகஅரசின் நடவடிக்கைக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதுடன், மத மோதல்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து,   விருத்தாச்சலம் அலுவலகத்தில் சப் கலெக்டர் பழனி தலைமைகள் அமைதி கூட்டம்  நடந்தது. கூட்டத்தில் மாநில பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்து என அவர்கள் கருதும் பட்சத்தில் அவர்கள் அதற்கான ஆவணங்களை முறைப்படி அளிக்கும் வரை பழைய நிலையே தொடரும் எனவும் அதன் அடிப்படையில் தொடர்ந்து பத்திரப்பதிவு நடைபெறும் அதன் மூலம் சொத்துக்களை வாங்க, விற்க இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது எனவும் சப் கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.

இதையடுத்து  பொதுமக்கள் தங்களது போராட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். மேலும், தங்கள் மூதாதையர்கள் முதல் இந்த இடங்களில் காலங்காலமாக வசித்து வருகிறோம். தற்போது திடீரென இந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என கூறுவது எந்தவிதத்தில் நியாயம், அதை ஏற்க முடியாது. தமிழக அரசும், பத்திரப்பதிவு துறையும்  ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டி வருகின்றனர்.