சென்னை,

ன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் நலிந்தோர் நிவாரண நிதி ரூ. 10 ஆயிரத்திலிருந்து இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.20 ஆயிரமாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்து உள்ளார்.

மேலும், தொழிலாளர் நலத்துறைக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.10,067 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இ- சேவை மையங்களில் 500க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் வழங்கப்படும் என்றும்,

புதுவாழ்வு திட்டம் 4,174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும்,  உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ்  நலிந்தோர்  நிவாரண உதவி ரூ.20,000 ஆக உயர்தப்படும் என்றும், இது ஏழை மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு நலிந்தோர் குடும்பநல உதவித்திட்டம்

நலிவுற்ற ஒரு குடும்பத்தில் பொருளீட்டும் முக்கிய நபர் ஒருவர் இறந்து விட்டால் அவரின் வருமான இழப்பால் துயருறும் அக்குடும்பத்தின் துயர்களைந்திட தமிழக அரசு அரசாணை (நிலை) எண் 470 நிதி (முதலமைச்சர் பொது நிவாரண நிதி) துறை நாள்:23.5.89ன்படி”தமிழ்நாடு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்” என்ற திட்டத்தினை துவக்கி வருவாய்த்துறை மூலம் செயலாக்கம் செய்து வருகிறது.

இந்த சட்டம் மூலம் ஆரம்பத்தில் 300 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த இந்த நிதி,படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1998-ல் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் 20ஆயிரமாக உயர்த்தியுள்து குறிப்பிடத்தக்கது..