சென்னை,

இன்று தாக்கல் செய்யப்பட்ட  2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறைக்கு ரூ.3,680 கோடியும், உயர்கல்வி உதவித் தொகைக்காக ரூ.1,580 கோடி நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

150 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்,

100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மடிக்கணினி (laptop) வழங்க ரூ.758 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.