குர்தாஸ்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

குர்தாஸ்பூர்,

பாரதியஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் வினோத் கன்னா போட்டியிட்டு வெற்றிபெற்ற குர்தாஸ்பூர் தொகுதியில் அவரது மறைவு காரணமாக இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் வினோத் கன்னா காலமானதால், அவர் வெற்றி பெற்ற  பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.சுமார் 7 லட்சம் பெண்கள் உட்பட 15 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளநிலையில், காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் தற்போது 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதி ஏற்கனவே பாஜக வசம் இருந்ததால், அதை தட்டிப்பறிக்க ஆளும் காங்கிரஸ் அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாக போட்டிகள் கடுமையாக உள்ளன.

இன்று நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 15ம் தேதி எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
Voting Begins For Gurdaspur Lok Sabha Bypoll