காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் 2 வீரர்கள் வீர மரணம்!

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

காஷ்மீரில் பயங்கரவாகள் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்துக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

பந்திரா ஹஜின் எல்லை பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், திடீரென  தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது  அங்கு பதுங்கி இருந்த பயக்ரவாதிகள்  பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் எதிர்பாராதவிதமாக  இரண்டு பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர்.

அதையடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரண்டு பயங்கர வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
English Summary
Kashmir: 2 terrorists killed in Bandipora encounter; 2 Army jawans martyred