சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் அவகாசம் தேவை என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தெரிவித்திருந்த நிலையில், அடுத்தக் கட்டமாக  உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 5ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,  வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளது என்றும்,ஆனால் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை பெற முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை அனுப்பிய பிறகு அதனை சரிபார்க்க வேண்டியிருப்பதாகவும், எனவே தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும்,  உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மக்கள் பணிகள் பாதிப்பு என்ற குற்றச்சாட்டு தவறானது என அதில் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி பணிகள்  தமிழக அரசின் தூய்மைக் காவலர்கள் மூலம் நிறைவேற்றப்படுவதாகவும், அதற்கென தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதாகவும், குடிநீர் முறையாக வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசாணை தமிழக அரசு. வெளியிட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற் கான வழிமுறைகள் மற்றும்,  வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அரசாணையை மாநில தேர்தல் ஆணையத்திடமும் தமிழக அரசு சமர்பித்துள்ளது.

அதில், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிமார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வலியுறுத்தியுள்ளது. இதேபோல வாக்குச்சாவடிகள் அமைக்கும்போது வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடி வகை ஆகியவற்றை உள்ளடக்கி யிருப்பதை கருத்தில் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.