சென்னை:

மிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்  என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறி உளளார்.

மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் ஒரே தேர்வாக கடந்த 3 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மாணவர்கள், பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதுபோல, அதிமுக, திமுக கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விலக்கப்படும் என்று கூறியுள்ளன. ஆனால், அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நீட் தேர்வு குறித்து தேர்தல் அறிக்கையில் ஏதும் தெரிவிக்காத நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மீண்டும் கூறி உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்  என கூறினார். மேலும்,  தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என கூறுவது தவறானது  என்று தெரிவித்தவர், அதிகாரத்திற்குட்பட்டு தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது என்று கூறினார்.