சென்னை:

மிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நவம்பர் 18ந்தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து,  வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் வாக்காளர்கள் திருத்தம் செய்ய  மேலும் 15 நாள் வகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது  2வது முறையாக நவம்பர் 18ம் தேதி வரை அவகாசம், நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, புகைப்படம் திருத்தம் செய்வோர், புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் நவம்பர் 25ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.