சென்னை:

தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயிலான நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிற்து. கடந்த 10ந்தேதி முதல் இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ள நிலையில், டிசம்பர் 7ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதன காரணமாக, எழும்பூரிலிருந்து முன்பதிவு செய்தவர்கள், அதே டிக்கெட்டை பயன்படுத்தி எழும்பூர் – தாம்பரம் இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்றும்  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அக்., 10ந்தேதி  முதல் டிச., 7ந்தேதி வரை நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படாது, அதுபோல எழும்பூர் வரை வராது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்த இரவு 8.30 மணிக்கும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.30 மணிக்கும் புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த இரு ரயில்களும் தாம்பரத்தில் இருந்தே மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஆவலோடு காத்திருக்கும் நிலையில், பயணிகள்  ரயில் ஏற தாம்பரம் செல்வதற்கு தகுந்தவாறு தங்களது பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.