விமான அறிவுப்புகளில் தமிழும் வேண்டும் என்று ட்விட்டியிருக்கிறார் நடிகர் விவேக்.

இது குறித்த பதிவில், “ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பறக்கும்போது தமிழில் அறிவிப்புகள் இல்லை. இதனால் தமிழ் மட்டுமே அறிந்த மக்கள் திண்டாடுகிறார்கள். இந்த நிலையை ஸ்பைஸ்ஜெட் விமான நிர்வாகம் கவனித்து ஆவன செய்ய வேண்டும்” என்று விவேக் பதிவிட்டுள்ளார்.

இதை ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார். அதற்கு ஒருவர், “நீங்க முதல்ல தமிழ்ல ட்விட் பண்ணுங்க” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்.