அஜீத் நடித்து வரும் விவேகம் பட டீசர் மே-1ந்தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். விவேகம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசரை அஜீத் பிறந்தநாளான மே 1ந்தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார்.