‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே ‘சூர்யா 39’ படத்திலும் பணியாற்ற உள்ளனர்.

‘விஸ்வாசம்’ படத்தில்தான் சிவா – டி.இமான் கூட்டணி ஏற்பட்டது. விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்தப் படத்திலும் பணியாற்ற இருக்கின்றனர். பெரும்பாலும், தொடர்ந்து அவர்களைத்தான் இயக்குனர் சிவாவும் பயன்படுத்தி வருகிறார்.

இதன்மூலம் முதன்முறையாக சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம், முழுக்க முழுக்க நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது.