பொங்கலுக்கு வெளியாக உள்ள தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி உள்ளது சென்சார் போர்டு.
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் எப்போது வெளியாகும் என தல ரசிகர்கள் ஆவரோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில் விஸ்வாசம் படத்தின் பாடல்கள், டிரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரஜினியின் பேட்ட படத்தை தூக்கி சாப்பிட்டு, டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ரஜினியுடன் தல படமும் மோதுவது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தணிக்கைத்துறை இன்று படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி படத்தை திரையிட அனுமதி வழங்கி உள்ளது. படம் சுமார் இரண்டரை மணி நேரம் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜித் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை வெற்றிப்பட இயக்குனர் சிவா இயக்கி உள்ளார். படத்திற்கு டிஇமான் இசை அமைத்துள்ளார்.