அஜித் நயன்தாராநடிப்பில் கடந்த பொங்கல் அன்று ரிலீஸான ‘விஸ்வாசம்’. கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஹிட்டான இந்தப் படம், 100 நாட்களைக் கடந்து தமிழகத்தில் ஓடியது.

இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு, தெலுங்கில் மார்ச் 1-ம் தேதியும், கன்னடத்தில் மார்ச் 7-ம் தேதியும் வெளியானது. தெலுங்கில் ‘விஸ்வாசம்’ என்ற பெயரிலேயே வெளியாக, கன்னடத்தில் ‘ஜெகமல்லா’ என்ற பெயரில் வெளியானது.

இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தைக் கன்னடத்தில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.