விஷாலுக்கும் தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டிக்கும் கடந்த மார்ச் 18 ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின் அனிஷா ரெட்டியின் சமூக வலைதள பதிவால் அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, விஷால் திருமணம் ஏற்கனவே சொன்னபடி நடிகர் சங்க மண்டபத்தில் தான்நடக்கும் .தேர்தல் வாக்கு எண்ண நீதிமன்ற உத்தரவளித்தால் விஷால் அணி தான் ஜெயிக்கும் . பின் நடிகர் சங்க கட்டிட வேலைகளை விஷால் அணி விரைவாக முடிக்கும்.திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால், எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நேற்று விளக்கம் அளித்தார். சேவை வரி செலுத்துவது தொடர்பாக சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை என கூறி சரக்கு மற்றும் சேவை வரித் துறை வழக்கு தொடர்ந்திருந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஹெர்மிஸ் , வழக்கை அடுத்த மாதம் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, உத்தரவிட்டார்.