வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக அமைதிப்படை 2, கங்காரு என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம் என்ற படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் எதிர்பாராத சில காரணங்களால் ரிலீஸாகவில்லை.

https://www.facebook.com/icanwin/posts/2392504974119247

இதை குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறுகையில் :தமிழ் சினிமாவை அழிப்பதற்கு ஐந்து பேர் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பி உள்ளார்கள்..இந்த ஐந்து பேரும் ஒரு சிண்டிகேட் அமைப்பாக சேர்ந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அழிக்க நினைக்கிறார்கள் என பாண்டவர் அணியை குறித்து வெகுண்டுள்ளார் .

மேலும் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .