விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ள படம் ‘தலைவி’. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். இதில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது .

இந்நிலையில் கங்கனா ரனாவத் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் . மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று நிறைய உள்ளன. நடுத்தர குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் சினிமா துறையில் நடித்து நிறைய வெற்றிகளை குவித்தவர் ஜெயலலிதா. அவரை போன்றுதான் நானும்.

சினிமாவில் மட்டுமே அரசியலில் ஈடுபடுவேன். நிஜத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என கூறினார்.