கடந்த 1950ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராகவும், மேனேஜராகவும் இருந்த சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் மைதான்.

இப்படத்தில், சையது அப்துல் ரஹீமின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். சைவான் கூவாட்ராஸ் மற்றும் ரிதேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். இப்படத்தை அமீத் ரவீந்திரநாத் சர்மா இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் இது. இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தப் படம் வருகின்ற 2020ம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.