தமிழக முதல்வர் தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில்,  கணக்கில் வராத பல கோடி புது ரூபாய் நோட்டுகள், பல லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள், கிலோ கணக்கில் தங்க நகைகள் போன்றவற்றை கைப்பற்றப்பட்டது.

இவற்றை என்ன செய்லாம் நடிகரும், நடிகர் சங்க செயலருமான விஷால் மத்திய அரசுக்கு யோசனை கொடுத்துள்ளார்.
“கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்து… மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிடம் ஏற்படுத்தலாம். புற்றுநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை அளிக்கலாம். முதியோர் இல்லங்களுக்கு உணவு , விவசாய -கல்வி கடன்கள் அடைக்க என்று  இந்த பணத்தை பயன்படுத்தவேண்டும்” என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.