மார்க்கிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த  திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி மிக எளிமையானவர். தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர். தொகுதி கடந்தும், பலவிசயங்களை தீர ஆராய்ந்து பேசக்கூடியவர். பரபரப்புக்காக என்றுமே அவர் பேசியதில்லை.
எதற்காக இந்த முன்னுரை?

தற்போது அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆம்… கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30க்கு ஜெயலலிதா இறந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், பாலபாரதியோ, “முதல்வர் ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம்” என்கிறார்.
இது குறித்து பாலபாரதி தெரிவித்திருப்பதாவது:
“ஜெயலலிதா மரணம் மர்மமாக இருக்கிறது. கடந்த ஆறாம் தேதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்க்கும்போது, முந்தையநாள் இறந்தது போல இல்லை. இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கும் என்றே தோன்றியது.
பார்க்கும் போது ஒரு நாளிற்கு முன்னதாக இறந்ததை போல் இல்லை என்கிறார்.
சாதரண காய்ச்சல் என அப்பல்லோவில் சேர்த்ததற்கு பிறகு எல்லாம் மர்மமாக முடிந்தது.
ராகுல் காந்தி வந்து சென்றதற்கு பிறகு ஜெயலலிதாவை காண அப்பல்லோ இரண்டாம் தளம் வரை சென்றேன். , அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அம்மா நலமாக இருக்கிறார் என கூறி என்னை திருப்பி அனுப்பிவிட்டார்.
பெண்கள் அரசியலிற்கு வருவதற்கு தூண்டுகோலாய் இருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது இறப்பு அரசியலில் இருக்கும் பெண்களுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளது”  என்று தெரிவித்துள்ளார் பாலபாரதி.