சூர்யாவை தரக்குறைவாக விமர்சித்த தொகுப்பாளினிகளை முட்டாள்கள் என்று விமர்சித்த விஷால்!

Must read

டிகர் சூர்யா நடித்து பொங்கல் அன்று வெளியாகி உள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து சன் மியூஸிக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு தொகுப்பாளினிகள் கிண்டலடித்தனர்.

“சிங்கம் படத்தில் நடித்த அனுஷ்கா, சூர்யாவைவிட உயரமாக இருந்ததால் சூர்யா ஹீல்ஸ் போட்டு நடித்தார். அடுத்த படத்தில் அமிதாப்புடன் நடிக்க வேண்டும் என்றால் ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும். அல்லது இருவரையும் உட்கார வைத்தே படம் முழுவதும் எடுக்க வேண்டும்” என்று கிண்டல் செய்தனர்.

இதற்கு சூர்யாவின் ரசிகர்களிடம் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் குறிப்பிட்ட தொகுப்பாளினிகளை, “முட்டாள்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் விஷால். . அதில், “இது நகைச்சுவையா? சத்தியமாக இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமாக செயல்படுவதுதான் இது. முற்றிலும் முட்டாள்தனமாக உள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article