விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த எஸ் வினோத்குமாரின் மினி ஸ்டுடியோ நிறுவனம், விஷாலின் 33வது படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை, தயாரிக்கிறது.  ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.   .

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார்   முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்ஜே சூர்யா, சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .


ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .

தொழில் நுட்பக்குழு :

எழுத்து & இயக்கம் -ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – S வினோத்குமார் மினி ஸ்டுடியோ
இசை – ஜி வி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு  – அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு  – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – உமேஷ் ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா
உடைகள் – சத்யா NJ
நடனம்  -தினேஷ் , அஸார்
பாடல்கள் – மதுர  கவி ,அஸல்  கோலாறு
நிர்வாக தயாரிப்பு – சொக்கலிங்கம் ,
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்
புகைப்படம் – R S ராஜா
விளம்பர வடிவமைப்பு  -கபிலன்