விசாகப்பட்டினம்,
ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள  கால்வாயில் 1 கோடி ரூபாய் அளவுள்ள செல்லா ரூ.500, 1000 நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா கிராமம் மிதுல புரியில் மாற்று திறனாளிகளுக்கான காலனி பகுதி உள்ளது.
இங்குள்ள கழிவு நீர் கால்வாய் அருகே பெரிய சாக்கு மூட்டை கிடந்தது. நேற்று அந்த பகுதியில் குப்பை பொறுக்கி கொண்டிருந்தவர் அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தார். அதில் பழைய 500, 1000  ரூபாய் நோட்டு கட்டு கட்டாக இருந்தது.
money
பணத்தை கண்டதும் அவர் மகிழ்ச்சியில் கூச்சல் போட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு ஒடி வந்தனர்.
பணக்கட்டுகளை கண்டதும், மக்கள் ஆளாளுக்கு அள்ளத் தொடங்கினார்.  இதனால் அங்கு கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதைகண்ட யாரோ ஒருவர்  போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சாக்கு மூட்டையில் இருந்த பணத்தை எடுத்த மக்களிடம் இருந்து ரூபாய் நோட்டு கட்டுகளை  பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.1 கோடியே 10 ஆயிரம் இருந்தது.
நோட்டு கட்டுகளை ஆராய்ந்த அதிகாரிகள், அது கள்ளநோட்டு என்ற தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார்  ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.