14ந்தேதியுடன்  விசா நிறைவு: சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து ஓடுகிறார் கோத்தபய ராஜபக்சே

Must read

சிங்கப்பூர்:  சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் ஆகஸ்ட் 14ந்தியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையை கடுமையான பொருளாதார சிக்கலுக்கு உள்ளாக்கிய இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்ச, பொதுமக்கள் போராட்டம் காரணமாக சிங்கப்பூரிலிருந்து தப்பி, மாலத்தீவு சென்றடைந்தார். ஆனால், அங்கு எழுந்த பொதுமக்கள் போராட்டம் காரணமாக, அங்கிருந்து வெளியேறி சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூர் அரசு விசா அடிப்படையிலே தங்குவதற்கு ராஜபக்சேவுக்கு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. கோத்தபய ராஜபக்சேவின் முதல் 14 நாள் விசார முடிவடைந்த நிலையில், மேலும்  14 நாட்களுக்குச் விசாணை சிங்கப்பூர் அரசு நீட்டித்தது. இது அங்குள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது விசா இன்னும் 4 நாளில் முடிவடைய உள்ளதால், கோத்தபய சிங்கப்பூரில் தொடர்ந்து இருப்பாரா நாட்டை விட்டு வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு  உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே  தற்காலிகமாக தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அனுமதியை தாய்லாந்து அரசு வழங்கி உள்ளதாகவும், அதனால் கோத்தபய நாளை சிங்கப்பூரில் இருந்து வெளியேறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கோத்தபயவுக்கு மேலும் சில வாரங்கள் சிங்கப்பூர் அரசு விசா நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  சிங்கப்பூரில் தங்கியுள்ள ராஜபக்சே, விசா காலாவதியானவுடன் ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜபக்ச மேலும் சில காலம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

More articles

Latest article