தென்கொரிய மழை, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

Must read

சியோல்:
தென்கொரிய மழை, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது.

சியோலில் சில பகுதிகளில் சுமார் 180 மில்லிமீட்டர் மழை பொழிந்திருக்கிறது. அதாவது ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே இரவில் கொட்டியது.

இன்றும் 300 மில்லிமீட்டர் வரை கடுமையான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

இதனிடையே இந்த கனமழைக்கு 9 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும், 6 பேர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More articles

Latest article