2024 பொது தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.

இதில் தென்காசி (தனி) தொகுதியில் ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளார் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளளது.

வடசென்னையில் பால் கனகராஜ் போட்டியிடுகிறார், நாமக்கல்லில் கே.பி. ராமலிங்கமும், சிவகங்கையில் தேவநாதன் யாதவும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

அதேவேளையில் தேமுதிக சார்பில் மத்திய சென்னையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி, திருவள்ளூரில் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, கடலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து , தஞ்சாவூரில் சிவநேசன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

அதேபோல், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக சார்பில் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.