சென்னை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% முதலிடம் பிடித்தது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடத்தில் 97.79% உடன் திருப்பூர், மூன்றாம் இடத்தில் 97.59% உடன் பெரம்பலூர், நான்காம் இடத்தில் 97.57% உடன் கோவை, ஐந்தாம் இடத்தில் 97.36% உடன் தூத்துக்குடி இடம் பிடித்துள்ளது.

அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 8,544 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.