இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 50வது சதத்தை அடித்து ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்கள் எடுத்தார் அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் 105 ரன்கள், கில் 80 ரன்கள், ரோகித் சர்மா 47 ரன்கள், கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்தனர்.

இந்த போட்டியில் தனது 50வது சதத்தை அடித்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விராட் கோலி 49 சதங்களுடன் முன்னணியில் இருந்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சினின் இந்த சாதனையை முறியடித்த விராட் கோலி தனது சதத்தை பூர்த்தி செய்ததும் மைதானத்தில் இருந்தபடி காலரியில் இருந்த தனது மனைவி அனுஷ்கா-வுக்கு முத்தங்களை பறக்க விட்டார் பதிலுக்கு அனுஷ்கா-வும் அங்கிருந்தபடி முத்தங்களை பறக்க விட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அதேவேளையில், தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்..