இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஐசிசி-யின் புகழ்பெற்றவர்கள் (Hall of Fame) பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

1976 – 1983 வரை இந்திய அணிக்காக பல்வேறு டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டயானா எடுல்ஜி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் மகளிர் ஆர்வம் காட்டத் துவங்கிய ஆரம்ப நாட்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் லாலா அமர்நாத்திடம் பயிற்சி பெற்றார் டயானா.

மும்பையில் பிறந்த டயானா 1978 ல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை ஐசிசி தனது ஹால் ஆப் பேம் பட்டியலில் சேர்த்திருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.