மும்பை:
ஹர்திக் பாண்டியாவின் தந்தை மறைவுக்கு விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்த தகவலை அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள் தங்கள் இரங்கலை வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹர்திக் மற்றும் க்ருனால் ஆகியோரின் தந்தை மறைவு மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும், அவருடன் ஓரிரு முறை பேசி உள்ளேன். அவர் உண்மையில் நல்ல மனிதர் என்றும், அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன் குறிப்பிட்டுள்ளார்.