அபராதத்தில் இருந்து தப்பிய விராட் கோலி

Must read

virat-hohliஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி பந்தை சுவிங்கம் கொண்டு சேதப்படுத்தியதாக பிரபல தொலைக்காட்சி வீடியோ வெளியிட்டுள்ளது. தென் ஆப்ரிக்க வீரர் டூபிளெஸ்ஸி சமீபத்தில் தான் இந்த சர்ச்சையில் சிக்கி அபராதம் கட்டினார். தற்பொழுது விராட் கோலி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விராட் கோலியின் அதிஷ்டம் போட்டியின் போது இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுவரை யாரும் விராட் கோலிக்கு எதிராக புகார் அளிக்கவில்லை. இனிமேல் புகார் அளித்தாலும் அது செல்லாது. அதாவது ஐசிசி விதிகளின் படி, போட்டி தொடர்பாக புகார் இருந்தால், போட்டி நடைபெற்ற 5 நாட்களுக்குள், புகார் அளிக்க வேண்டும். எனவே, முதல் டெஸ்ட் போட்டி முடிந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில், விராட் கோலி விசாரணை மற்றும் அபராதத்தில் இருந்து தப்பிவிட்டார்.

More articles

Latest article