டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி 2-வது இடத்திற்கு முன்னேறுவாரா?

Must read

virat-kohli-test-ton-kiss_3245241இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தாலும், முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளார். சமீப காலமாக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, தரவரிசை பற்றியலில் டாப் 10, டாப் 5 என வேகமாக முன்னேறியுள்ளார். தற்பொழுது அவர் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். அடுத்த டெஸ்ட் போட்டியில் கோலி சிறப்பாக விளையாடினால் 2-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

கோலியை விட 22 புள்ளிகள் அதிகம் பெற்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தரவரிசை பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். எனவே, சனிக்கிழமை மொஹாலியில் துவங்க உள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் கோலியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தால் அவர் இரண்டாவது இடத்தை உடனே தொடலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.

More articles

Latest article