டெல்லி: வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறி இருக்கிறது. காலை முதல் காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து வருகின்றனர். ஏராளமான டிராக்டர்களுடன் செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது.

இதுகுறித்து ராகுல் காந்தி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:  வன்முறை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல. அதில் யாராவது காயமடைந்தால், அது நமது சேதத்திற்கான சேதமாகும். நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.