சென்னை: நீலகிரி, ஈரோடு, தென்காசியை தொடர்ந்து இன்று விழுப்புரம்  ஸ்டிராங் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் திடீர் செயலிழப்பு  ஏற்பட்டுள்ளது. யுபிஎஸ்  காரணமாக சி.சி.டி.வி கேமராக்கள் திடீர் செயலிழந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ந்தேதி முடிவடைந்த நிலையில், விபப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24மணி நேர காமிரா கண்காணிப்புடன்  3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த .சி.டி.வி. கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதாவது, இன்று (மே3,2024) காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென செயல் இழந்தன. இது குறித்து, வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு  சிசிடிவி கேமராக்கள் செயல்படத் தொடங்கின.

இந்தவிவகாரம் குறித்து தகவல் அறிந்தும், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட   விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி பின்னர் செய்தியாளர்களிடம்  விளக்கம் அளித்தார். அப்போது,  “யு.பி.எஸ்.-ல் மின்தடை ஏற்பட்டதால், காமிராக்கள் செயலிழந்ததாகவும், பின்னர்  அது சரி செய்யப்பட்டதால் மீண்டும் செயல்படத் தொடங்கியது   எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி, ஈரோடு, தென்காசி  மக்களவை தொகுதியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் இழந்தன. அதிக வெப்பம் காரணமாக அவை செயலிழந்தன என அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.