விழுப்புரம்: திமுகவில் இன்னொரு நடைபயிற்சி கொலை!

Must read

1vilupuramtop
விழுப்புரம்:
விழுப்புரம் நகர திமுக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். திமுகவில் நடைபயிற்சி கொலைகள் தொடர்வது பரபரப்பாக பேசப்படுகிறது.
விழுப்புரம் திமுக நகரச்செயலாளர்  செல்வராஜ் காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
வழக்கம்போல் இன்று காலையில் நடைப்பயிற்சி சென்றபோது இரயில்வே மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களால் வெட்டி கொல்லப்பட்டர்.
. இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் உதவியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திமுகவை முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா இதேபோல் காலை நடைபயிற்சி சென்றபோதுதான் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அதையடுத்து திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயமும் இதேபோல் காலை நடைபயிற்சி சென்றபோதுதான் கொலை செய்யப்பட்டார்.
நடைபயிற்சி செல்லும்போது கொலை செய்யப்படும் திமுகவின் முக்கிய நபர்களின் வரிசையில் தற்போது மற்றொரு கொலையும் நடந்திருப்பது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article