தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வரி செலுத்த புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை இனி எந்தவொரு கிராம ஊராட்சியும் ரொக்கமாக பெறக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கமிஷனர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் இந்த இணையதளம் வழியாக இணையவழி கட்டணம், ரொக்க அட்டை அல்லது யு.பி.ஐ. மூலம் வரி செலுத்த முடியும்.

எந்த கட்டணத்தையும் இனி ரொக்கமாகப் பெறக்கூடாது https://onlineppa.tn.gov.in/ என்ற பி.பி.ஏ. தளத்தின் மூலம் மட்டுமே பெற வேண்டும்.

இதுகுறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கள அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.