நோட்டு பிரச்சனையால் தடைபட்ட திருமணத்தை ஒன்றுகூடி நடத்தி வைத்த கிராம மக்கள்!

Must read

ரூபாய் நோட்டு தடையால் பணமின்றி நிற்கவிருந்த திருமணத்தை கிராமமக்கள் ஒன்றுகூடி பண உதவி செய்து வெற்றிகரமாக நடத்திமுடித்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.

weddingni

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் அருகேயுள்ள யால்குட் கிராமத்தை சேர்ந்தவர் சம்பாஜி என்ற விவசாயி. இவர் தனது மகள் சாயாலிக்கு திருமணம் நிச்சயித்திருந்தார். இதனிடையே மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கையால் வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுக்கமுடியாமல் திணறினார் சம்பாஜி. இதனால் தனது மகளின் திருமணம் நடக்காமல் போய்விடுமோ என்று கலங்கினார்.
இந்நிலையில் கிராமமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வங்கிக்கு சென்று க்யூவில் நின்று தங்களிடமுள்ள பணத்தை மற்றி சம்பாஜியிடம் கொடுத்து திருமணம் நல்லபடியாக நடந்து முடிய உதவி செய்தனர். இதனால் நெகிழ்ந்து போன சம்பாஜி என் மகள் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில் இருந்தேன் ஆனால் ஆடம்பரமாக நடத்த இயலாவிட்டாலும், எளிமையாக ஆனால் திருப்தியாக நடந்து முடிந்தது. உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்!

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article