கொல்கத்தா,
ந்திய பிரதமர் மோடி, ஒரு மோசமான அரசியல் வாதி என்றும், பொய்களை பரப்பி வருகிறார் என்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி உள்ளார்.
பணம் செல்லாது என்ற எதிர்க்கட்சிக்ள அனைத்தும் பிரதமர் காய்ச்சி வரும் வேளையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை  கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மோசமான அரசியல்வாதி எனவும் பொய்களை பரப்புகிறார் என்றும்  கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மம்தா பானர்ஜி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பிரதமர் மோடி அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். அவர் ஒரு மோசமான அரசியல்வாதி மோசமான நிர்வாகியாக திகழ்கிறார். அவர் பொய் கூறுகிறார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றன. மோடி மட்டும் வேறுபட்டு நிற்கிறார்.
ரூ.500, 1000 நோட்டுக்கள்  செல்லாது என்ற அறிவிப்பால் ரூ.1.28 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு தடை இந்திய பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளதாக உலகின் மிகச்சிறந்த ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடிஜி இளைப்பாறிக்கொண்டு பொய்களை பரப்பி வருகிறார்”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற  மத்திய அரசின் முடிவுக்கு எதிராக  நவம்பர் 28 ஆம் தேதி பேரணி நடத்தவும் திரிணாமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.