சென்னை:

மிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தங்களது மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அளித்தனர்.

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், கடைசி நாளான இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் வந்து தாக்கல் செய்தனர்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேர்பாளர் நாராயணன்  தமது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நடேசனிடன் வழங்கினார்.

நாங்குனேரி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் முத்தமிழ்ச்செல்வன்,  தமது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வழங்கினார். வேட்புமனு தாக்கலின்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் கூட்டணி கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.