விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்தின் டிரைலர் வெளியானது (வீடியோ)

டிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகம் பிரபல தெலுங்குத் திரைப்படம் தமிழில் வர்மா என்னும் பெயரில் படமாக்கப்படுகிறது.  இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது  ‘வர்மா’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்  படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் டிரெய்லரை நீங்களும் காணுங்களேன்…

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'வர்மா', Bala, Dhruv Vikram, trailer is released, Varma Teaser, vikram son Durav, Vikram's son, டிரைலர், துருவ், விக்ரம் மகன்
-=-