‘கோப்ரா’ பட ஷூட்டிங்கில் இணைந்த விக்ரம்….!

Must read

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது.

கோப்ரா படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் அக்டோபர் கடைசியில் தொடங்கியது.கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. தற்போது இந்த படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொண்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

More articles

Latest article