விஜய்யின் ஆக்ஷன் திரில்லர் படமான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 13 என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ஷைன் சாக்கோ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்துடன் K.G.F-2 படமும் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜயின் பீஸ்ட் வெளியாக இருக்கிறது. விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லியுடன் தில் ராஜு தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார்.
[youtube-feed feed=1]