ரசிகர்களை கிறங்கடிக்கும் மன்மத லீலை டிரெய்லர்!

Must read

மன்மத திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் ஆறு லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு மற்றொரு பெண்ணிடம் ஏற்படும் காதலை சொல்லுவது தான் மன்மதலீலை திரைப்படத்தின் கதை. இப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் உருவாகி வருகிறது.
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கி உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மன்மதலீலை திரைப்படம் கிளிம்ப்ஸ் வீடியோவை கடந்த மாதம் சிம்பு வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டை மற்றும் ரியா சுமனையும் மாறி மாறி முத்தமிடும் முத்த மழை பொழிந்து இருந்தார். இதைப்பார்த்து ரசிகர்கள் அப்படியே மிரண்டு போயினர்.
இந்நிலையில், மன்மதலீலை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அந்த டிரைலரில் , மாட்டிக்கொள்ளாத வரை எல்லா ஆண்களும் ராமர்களே.. மாட்டிக்கொண்டவர் என்ற வரிகளுடன் டிரைலர் தொடங்குகிறது. இதில், சரக்கு, தம்மு லிப் லாக் ஏகபோகமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த டிரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே இளசுகளின் பேராதரவுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மன்மதலீலை படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
– சோமாஸ்
டிரெய்லர் வீடியோ:

More articles

Latest article