சென்னை:
டந்த சில வருடங்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது நல்ல முழு உடல்நலத்துடன் பழைய நிலைக்கு  திரும்பி வருகிறார். இதனால், அவரது  பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தேமுதிக தொண்டர்கள்  உற்சாகத்துடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழக அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர் விஜயகாந்த். தவறு என்று மனதில் பட்டதை உடனே திரும்பிக்கேட்டும் தன்னம்பிக்கை மற்றும் தைரியமானவர். சட்டமன்றத்தில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்து கேள்வி, நாக்கை துறுத்தி முறைத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல், பேசுவதற்கு முடியாமல் தடுமாறி வந்தார். இதுதொடர்பாக சிங்கப்பூர், அமெரிக்க என பல நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு இடையிடையே கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
தொடர் மருத்துவ சிகிச்சைகளால் அவர் முன்பைவிட தற்போது முழு உடல் நலத்துடன் தேறி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம்,  விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து, அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சங்கர், பல தகவல்களை பகிர்ந்தார். அப்போது, ”விஜயகாந்த் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை தற்போது காண முடிகிறது. ”விஜய காந்த்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது. ஆனால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல் விட்டுள்ளார்கள். அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடு களுக்குச் சென்று சிகிச்சை எடுத்தும் நரம்பு ரீதியான பிரச்சனையைச் சரி செய்ய முடியவில்லை.
அதனால் தற்போது அக்குபஞ்சர் முறையில் அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு வருகிறது. இன்னும்  ஒரு அறுபது நாள் சிகிச்சை மட்டுமே இருக்கும் நிலையில் மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கையாக இருக்கிறோம் என்றார். அத்துடன், விஜயகாந்த்திற்கு அவரது பழைய கம்பீரமான குரல் வந்துவிட்டது. தற்பொழுது விஜயகாந்த் தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள தேமுதிகவினர், அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு கலக்கு கலக்க தயாராகி வருகின்றனர்.
ஆகஸ்ட் 25-ம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாளின் போது, அவரது கர்ஜனையை மீண்டும்  எதிர்பார்க்க லாம் என்று கூறப்படுகிறது.