சென்னை,
மிழக அரசு மற்றும் தமிழக முதல்வராக பதவியில் இருந்த ஜெயலலிதா குறித்தும் அவதூறு பேசியதாக தமிழகம் முழுவதும் பல வழக்குகள் அரசு வழக்கறிஞர்களால் தொடரப்பட்டன.
அரசு சார்பாகவும், முதல்வர் சார்பாகவும் 213 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இத்த அவதூறு வழக்குகள் குறித்தும், அதை தள்ளுபடி செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார்.
உச்ச நீதி மன்றம் வழக்கை விசாரித்து, அவதூறு வழக்கு காரணமாக விஜயகாந்தை கைது செய்ய தடை விதித்தும், அரசு குறித்து விமர்சிப்பதை அரசும், முதல்வரும் பொறுத்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது.
இதற்கிடையில் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். அதன் காரணமாக ஜெயலலிதா சார்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்டு அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுவதாக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.