சென்னை,
டகிழக்கு பருவமழை  பொய்த்து விட்டதாலும், இயற்கை ஏமாற்றி விட்டதாலும் தண்ணீர் இன்று பயிர்கள் வாடி வதங்கி, கருகி வருகிறது.
இதை காணும் விவசாயிகள் அதிர்ச்சில் மரணத்தை தழுவி வருகின்றனர். ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தில் உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 5 விவசாயி கள் மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு போதிய தண்ணீர் திறந்து விட மறுத்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்ட்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதோடு சம்பா பயிர்கள் காய்ந்து கருகிவிட்டது. இதனால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பு ஏற்பட்டும் உயிழந்து வருகிறார்கள்.  இறந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று 5 விவசாயிகள் மரணமடைந்துள்ளது. இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்த விவசாயி பெரியகருப்பன்.  போதிய தண்ணீர் இல்லாததால் நாற்றுகள் முழுவதும் கருகியதை கண்டு வேதனையுற்றார் செய்வதறியாது  மனமுடைந்த பெரியகருப்பன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சில்வார்பட்டியை சேர்ந்த பொன்ராஜ் 15 ஏக்கர் விவசாய நிலத்தில் மக்காச்சோளம், உளுந்து போன்றவற்றை பயிரிட்டுள்ளார். போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் பொன்ராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வடுககுடியில் 7 ஏக்க ரில் பயிடப்பட்ட பயிர்கள் கருகியதால் மனமுடைந்த வெங்கடாச்சலம் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் திருப்புகளூரை சேர்ந்த கண்ணன் என்ற விவசாயி பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதே மாவட்டத்தை சேர்ந்த வேளாங்கன்னியை சேர்ந்த பக்கிரிசாமி என்ற விவசாயி மாரடைப்பால் இறந்தார்.
நாகப்பட்டினம் வட்டம் மகாதானபுரத்தை சேர்ந்த விவசாயி வீரமணி பயிர்கள் கருகியதால் அதிர்ச்சி அடைந்து நேற்று உயிரிழந்தார்.
பயிர்கள் கருகியதால் மனமுடைந்து விருதாச்சலம் அருகே மணவாளநல்லூரில் விவசாயி மான்துரை என்பவர் தனது விவசாய நிலத்திலேயே தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
நாளுக்கு நாள் விவசாயிகள் மரணமடைந்து வருவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மரணமடைந்து வருவது குறித்து அரசு இதுவரை எந்தவித நடவ்டிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று விவசாயிகள் கூறி உள்ளனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசோ கண்ணை மூடிக்கொண்டு மவுன விரதம் மேற்கொண்டு வருகிறது என விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.