சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமையக வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்யப்படும் என கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (வயது 71) பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள் ளநிலையில், அவரது உடல் விருகம்பாக்கம் வீட்டில் பொதுமக்கள் , அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இன்று பிற்பகல் தேமுதிக கட்சி அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில், பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக கொண்டு வரப்படுகிறது. நாளை மாலை வரை அங்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மாலை 4.45 மணியளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என தேமுதிக தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் நாளையும் அஞ்சலி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு