ட்சி ஆரம்பித்து ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த்.

எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைந்து தனது அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் மதிப்பையும், மரியாதையும் பெற்றவர். ஏற்கனவே சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த விஜயகாந்த், அரசியல் வாழ்க்கையிலும் தனித்துவமாக திகழ்ந்தார். கட்சி வேறுபாடின்றி, மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், கருணாநிதி உள்பட பலதரப்பு தலைவர்களிடையேயும் நட்பு பாராட்டியவர். அவரது மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழிப்பாக கருதப்படுகிறது.

விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு:

மறைந்த விஜயாந்தின் இயற்பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி.  இவர் 1952ம் ஆண்டு ஆகஸ்டு 25ந்தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்தார். (25 ஆகஸ்ட் 1952 – 28 டிசம்பர் 2023), சினிமாவுக்காக தனது பெயரை விஜயகாந்த் என மாற்றி, அந்த பெயரிலேயே உலகம் முழுவதும் அறியப்பட்டார். இவரது பெற்றோர் கே.என்.அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி.  திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அரசியலிலும் நுழைந்தார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி தனது ரசிகர்களை ஒன்றிணைந்து வந்தார்.  1990 ம் ஆண்டு ஜனவரி 31ந்தி  பிரேமலதாவை மணந்தார். அவரது திருமணம் மறைந்த கருணாநிதி தலைமையல் விமரிசையாக நடைபெற்றது.  அவருக்கு  விஜய பிரபாகரன் மதுர வீரன் (2018) ஆகிய படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் உட்பட இரண்டு மகன்கள் உள்ளனர்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனராக வெற்றி பெற்றவர் விஜயகாந்த் . அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) அரசியல் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார் மற்றும் விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி முறையே இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் .

விஜயகாந்தின் திரையுலக பயணம் 

சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை சீன் பை சீனாகத் தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு கீரைத்துரையில் இருக்கும் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார். தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு பிறகே திரைத்துறையில் காலடி பதித்தார்.

தமிழ்மீது பற்றாத மோகம் கொண்ட விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.  ஆனால், அவரது தமிழ் படங்கள்  தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள . திரையுலகில் “புரட்சிக் கலைஞர்” என்ற பட்டத்தை வைத்திருந்தவர் விஜயகாந்த்.

1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். தனது முதல் படமான எம்.ஏ.காஜாவின் இனிக்கும் இளமை (1979) மூலம் தனது பெயரிலிருந்து “ராஜ்” என்பதை நீக்கிவிட்டு “காந்த்” என்று பின்னொட்டு வைத்தார் .

பின்னர் அவர் SA சந்திரசேகர் இயக்கிய சத்தம் ஒரு இருட்டரை (1981) திரைப்படத்தில் வெற்றி பெற்றார் ; யாருடன் அவர் பெரும்பாலும் திரைப்படங்களில் நடித்தார்.  `சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `அம்மன்கோவில் கிழக்காலே’, `உழவன் மகன்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.

1980கள் மற்றும் 1990களில், அவர் ஒரு நிலையான பாக்ஸ் ஆபிஸ் முறையீட்டுடன் ஒரு அதிரடி ஐகானாக இருந்தார். 100வது படமான கேப்டன் பிரபாகரனுக்கு (1991) பிறகு அவருக்கு “கேப்டன்” என்ற பெயர் கிடைத்தது .  20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். புவியீர்ப்பு விசையை மீறும் ஸ்டண்ட்களை வெளிப்படுத்தும் குறைந்த பட்ஜெட் படங்களுக்காக அவர் மிகவும் பிரபலமானார், அதில் அவர் தனது எதிரிகளை தனித்து அனுப்பினார் அவரது பெரும்பாலான படங்கள் ஊழல், நேர்மை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைச் சுற்றியே இருந்தன. தனது படங்களில் ஒரு தேசபக்தி, கிராமத்தில் நல்லது செய்பவர் மற்றும் இரட்டை வேடங்களில் நடித்ததற்காகவும் அறியப்பட்டார்.  அவரது நிறத்தை காரணமாக பல நடிகைகள்  அவருடன் நடிக்க மறுத்துவிட்ட அவலங்களும் நடைபெற்றன.  கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த்

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.

இலங்கைத்தமிழர்கள் மீது பற்றுகொண்ட விஜயகாந்த், இலங்கை அரசால் அங்கு வசித்து வந்த தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து பல்வேறு போராட்டடங்களை நடத்தினார்.  தனது 100-வது படத்துக்கு `கேப்டன் பிரபாகரன்’ எனவும், தனது மூத்த மகனுக்கு `விஜய பிரபாகரன்’ எனவும் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.

1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார்.

1986-ம் ஆண்டு  மீண்டும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக    சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார்.

ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, “ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன).

விஜயகாந்த் அரசியல் பயணம்

இதைத்தொடர்ந்து,  கடந்த 2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12ந்ததி அன்று  தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர்.

2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்துவந்தன. அதேவேளையில், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.

விஜயகாந்தின் அரசியல் களத்துக்கு அடித்தளமாக  அமைந்தது,  கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமணவிழா என்றே சொல்லலாம். அந்த விழாவில் விஜயகாந்த் கலந்துகொள்ள சென்றதால், அவரது ரசிகர்கள், விஜயகாந்த் வருகையை முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் கட்சி தோரணங்களைக் கட்டி அதகளப்படுத்தி இருந்தனர். இந்த பேனர்கள் மற்றும் க் கொடிக்கம்பங்களை பா.ம.க-வினர் வெட்டிச் சாய்த்தனர். இது விஜயகாந்தை கொந்தளிக்க செய்தது. தனது கண்டனத்தை அன்று நடைபெற்ற திருவிழாவில் பதிவு செய்து, பாமக தலைவராக இருந்த  டாக்டர் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து,. பாமகவுக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்றது. இதில், சில விஜயகாந்த் ரசிகர்களும் தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்தே அவரது அரசியல் பயணம் தீவிரம் அடைந்தது.

2005ம் ஆண்டு செப்டம்பர் 14ந்தேதி அன்று தனது ரசிகர் மன்றத்தை ஒன்றிணைத்து தேசிய திராவிட முற்போக்கு கழகம் (DMDK) என்ற அரசியல் கட்சி மதுரையில் முறைப்படி அறிவித்தார். விஜயகாந்த் தனது கட்சிக்காக நன்கொடை கேட்கப் போவதில்லை என்று அறிவித்ததுடன், தனது  திரைப்படம் மூலம் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை கட்சிக்காக செலவழித்தார். மேலும்,   மற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டணியை அவர் இதுவரை நிராகரித்து வந்தார். 

தொடர்ந்து 2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு மற்ற அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். முதல் தேர்தலில் அவரது கட்சி  ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மக்களிடையே செல்வாக்கு உயர்ந்தது. சுமார்  10% வாக்காளர்களைப் பெற்று 10.1% வாக்குகளைப் பெற்றது. ஆய்வின்படி, சுமார் 25 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட அதிக வாக்குகளைப் பெற்று மற்ற கட்சிகளுக்கு போட்டியாக களமிறங்கியது.

இந்த பரபரப்பான காலக்கட்டத்தில்,  மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த   இடைத்தேர்தலில் அதிமுகவை விட 2000 வாக்குகள் குறைவாக தேமுதிக சுமார் 17000 வாக்குகளைப் பெற்று தனது வாக்குவங்கியை நிரூபித்தது.

பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் தேமுதிக கணிசமான இடங்களை கைப்பற்றி தமிழ்நாட்டில் அசைக்க முடியாத அரசியல் கட்சியாக வளர்த்நது.

இதைத்தொடர்ந்து,  2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச தலைநகர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை  சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்யப்பட்டது.  தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் 29 இடங்களில் வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தை விட தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெற்றது .

ரிஷிவந்தியம் தொகுதியில் இரண்டாவது முறையாக விஜயகாந்த் வெற்றி பெற்று  எம்எல்ஏ பதவியை கைப்பற்றினார். இந்த தேர்தலில் திமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் தேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சியாக மாறியது. விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றார். பின்னர்,  சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் , விஜயகாந்துக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.  இதன் காரணமாக விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்தார் . அதைத்தொடர்ந்து,  தனது கட்சியைச் சேர்ந்த   8 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் அளித்ததால், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த் .

2014 நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுக, பாமக, ஐஜேகே, மற்றும் பிற சிறிய கட்சிகளின் பாஜக, திமுக அல்லாத மற்றும் அதிமுக அல்லாத கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்எகொண்டது.  என்.டி.ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி இவரைப் பற்றி சிறப்புக் குறிப்பிட்டு அவரை தனது நண்பர் என்று குறிப்பிட்டார்.  இந்த தேர்தலில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. மோடியா, லேடியா என்று ஜெயலலிதா விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,  போட்டியிட்ட விஜயகாந்த்,  தனது தொகுதி மற்றும் டெபாசிட் இரண்டையும் இழந்தார். இரண்டு முறை (2006 மற்றும் 2011) எம்எல்ஏவாக இருந்த இவர், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அவரால் 34,447 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது, அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்தத் தொகுதியில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) வேட்பாளர் ஆர். குமரகுரு 81,973 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அருகில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் 77,809 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.  அதன்பிறகு அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் தொடங்கியது.

பின்னர் தனது மனைவி பிரேமலதாவையும், மைத்துனர் சுதிஷையும் கட்சிக்குள் கொண்டு வந்தார். அவர்களது நடவடிக்கை காரணமாக கட்சிகள் குழப்பம் ஏற்பட்டு, கட்சி நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு தாவினர். இதற்கிடையில், விஜயகாந்த் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால், கட்சியை தனவசப்படுத்திய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேரம் பேசிய விவகாரம் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேப்டனின் மறைவுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் ஆழ்ந்த இரங்கலை  பதிவு செய்கிறது…