திமுக-வை உடைத்து எம்.ஜி.ஆர். அரசியலில் இறங்கியது என்பது வேறு என்றும் அரசியல் கட்சி துவங்குவதில் ரஜினிகாந்த் தோற்றுப்போனது மாதிரி விஜய்-யும் தோல்வியடைவார் என்றும் துக்ளக் குருமூர்த்தி கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குருமூர்த்தியிடம் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த குருமூர்த்தி, தனக்கு சினிமா என்றாலே என்ன என்று தெரியாது என்று கூறினார்.

மேலும், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ஆண்டுக்கணக்காக திமுக-வில் தேர்தல் வேலை பார்த்து பின்னர் அதை உடைத்துக் கொண்டு வெளியேறியது அதனால் அது வெற்றிபெற முடிந்தது என்று குறிப்பிட்டார்.

திமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் 20 – 30 ஆண்டுகள் கொள்கையுடன் செயல்பட்டு பின்னர் கட்சியாக உருவெடுத்தது ஆனால் ஒரு 10 லட்சம் ரசிகர்களை வைத்துக் கொண்டு கட்சி ஆரம்பித்து நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல.

இருந்தபோதும் அரசியலில் இறங்குவதாக விஜய் தீர்மானித்தால் அது அவரது தன்னம்பிக்கை என்று குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.