விஜய் நடிக்க நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’.

பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு, இசை சேர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வரும் என்று நடிகர் விஜய் தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளதோடு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அஜித்தின் வலிமை படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கும் நிலையில், பீஸ்ட் ரிலீஸ் குறித்த அறிவிப்பு 2022-ஐ பிரம்மாண்டமாக வரவேற்க திரையுலகம் தயாராகி வருவதையே காட்டுகிறது.